ஊடகப் படுகொலைகள் பற்றி முழுமையான விசாரணைகள் : அநுர உறுதி
இலங்கையில் பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
தாக்குதல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன்.
இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீரும்.
அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 23 நிமிடங்கள் முன்

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
