கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை புற நகர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் கடற்கரை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
சந்தேக நபர்கள் வசம்
இவ்வாறு கைதானவர்கள் 21, 26, 28 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் 520 மில்லி கிராம், 980 மில்லி கிராம், 530 மில்லி கிராம், ஐஸ் போதைப்பொருட்கள் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
