கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்: நீதிமன்றில் சிஐடி தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குறித்த விடயம், இன்று(27.08.2025) கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் உரிமைகள்
இந்த ஊடக சந்திப்பில், உதய கம்மன்பில சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கக்கூடிய கருத்துக்களைத் தெரிவித்தார் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மன்றுரைத்தனர்.
இந்தநிலையில், அந்தக் கருத்துக்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ், குற்றமாகுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
