தமிழ் கோடீஸ்வர வர்த்தகருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்
மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பில் தமிழ் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு - வௌ்ளவத்தையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான கணேஷ் என அழைக்கப்படும் நடராஜா கனகராஜா என்பவர் இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்து வருகின்றார்.
இவர் கடமையாற்றும் நிறுவனங்களின் வாகனங்களை விற்பனை செய்து பல மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம்
இவருக்கு எதிராக பல்வேறு நீதவான் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த வீரசிங்க முதலிகே ரொஷான் வீரசிங்க, அவர் பணிப்பாளராக இருந்த தனியார் நிறுவனத்தின் பங்குகளைப் பொய்யான ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகப் பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எம். சஜித் முன் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் தகவல்களில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |