காவல்துறை அதிபரின் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை
பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட சில, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மீது, காவல்துறை அதிபரின் உத்தரவின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உட்பட ஊடகவியலாளர்கள், விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அண்மையில் அறிவுறுத்தபட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக, ஆசிரியர்கள் உட்பட செய்தியாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகாரியங்களுக்கு காவல்துறை தலைமையகம் மன்னிப்பை கோரியுள்ளது.
இந்த நிலையில், வெள்ளைப் பூண்டு மோசடியை ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய செய்தி ஆசிரியர்கள் உட்பட செய்தியாளர்களை விசாரிக்கக்கூடாது என்ற பிரதமர், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் உத்தரவையும் மீறி, ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியமை தொடர்பிலேயே தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
