கல்முனை விகாரையில் களவாடப்பட்ட பொருட்கள் : தீவீர விசாரணையில் பொலிஸார்
கல்முனை விகாரையில் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவ்விகாரையில் சம்பவம் இடம்பெற்ற கட்டடத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக இன்று தடயவியல் பொலிஸாரின் உதவியும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri