பொலிஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கண்டுபிடிக்க விசாரணை
பொலிஸ் அதிகாரிகள் போல் சீருடை அணிந்து, தலைக்கவசம் அணியாது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண் மற்றும் ஆண் ஒருவரின் புகைப்படம் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நபர்களின் புகைப்படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து இது தொடர்பாக பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
புகைப்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் பொலிஸ் அதிகாரிகளா என்பதை உறுதிப்படுத்தவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர், விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இவர்கள் பொலிஸில் கடமையாற்றும் அதிகாரிகள் எனத் தெரியவந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
