முன்னாள் எம்.பிக்களின் வீடுகளுக்கு செல்லவுள்ள விசாரணை குழு! சர்ச்சையாகும் அரகலய இழப்பீடு
அரகலய போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள் மற்றும் பிறரின் பட்டியல் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்ட விடயத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அறிக்கைகளை சரிபார்ப்பதன் அவை முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்களாக இருந்தால், அவற்றை வெளிக்கொணர இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக கூறப்படுகிறது.
இதில் அதிக இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து சிறப்பு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு செய்யுமாறு அழுத்தம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடன் இருந்தவர்களுக்கு அரச திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என அரச தரப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
நட்டயீடு வழங்கப்பட்ட காலப்பகுதியில் அந்த பகுதிக்குரிய பிரதேச செயலாளர்கள் மதீப்பிட்டாளர்கள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போதைய ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக இருந்த பிரசன்ன ரணதுங்கவினால் கடிதம் அனுப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சென்றிருந்த அதிகாரிகள் அப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன் அவர்களுக்கு அந்தகாலப்பகுதியில் அதிகமாக மதிப்பீடு செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
இலங்கையை பொருத்தவரை பேரிடர் ஒன்று ஏற்படுமனால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாவையே வழங்க முடியும்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலப்பகுதியில் முறையாக நட்டயீட்டை பெற்றுக்கொள்வதில் முறைமை ஒன்று இருக்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும் ரணில் விக்ரமசிங்க சட்டத்திட்டங்களை மாற்றி தேவையான வகையில் நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்கான முறைமை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தி கூறி வருகிறது.
இதில் குறிப்பாக 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
நிறுவனங்களிடமிருந்து காப்புறுதி
நட்டயீட்டை மாத்திரம் பெற்றுக்கொள்ளாது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நிறுவனங்களிடமிருந்து காப்புறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் வெளியிட்ட பெயர் பட்டியிலிருந்து யார் காப்புறுதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை காப்புறுதி நிறுவனங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர்களின் அசையும் அசையாத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைக்குழு கவணம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தனக்கு ஜனாதிபதி பதவிவை பெற்றுக்கொடுத்தமைக்காவும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடன் இருந்தவர்களுக்காக திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)