மீண்டும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்படும் டயானா கமகே
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதிமன்ற வழக்குகள் மற்றும் டயானாவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட குற்றவியல் விவகாரங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கை குறித்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஆலோசனை கோரியதை அடுத்தே, சட்டமா அதிபர், இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்
கமகே தனது பிரித்தானிய குடியுரிமையை மறைத்து இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
உரிய விசாரணை
இந்நிலையில், டயானா கமகேயின் மீது மேலும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை, அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை, போலி ஆவணங்களை அசலாக சமர்பித்தமை என்பன இதில் அடங்கும்.
எனவே விசாரணை நடத்தி, சாட்சியங்களின் அடிப்படையில், டயானா கமகேயை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் துறையினரை பணித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
