விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகப்டர் தொடர்பில் விசாரணை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹொலிகொப்டர் தொடர்பாக விமானப்படையால் உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஹெலிகொப்டர் நேற்று மதியம் லுனுவில பாலம் அருகே உள்ள நீர்த்தேக்கத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவசர தரையிறக்கத்தை தொடர்ந்து, ஐந்து விமானப்படை வீரர்கள் மாரவில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான ஹொலிகொப்டர்
எனினும், ஹெலிகப்டரின் தலைமை விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய நான்கு அதிகாரிகள் தொடர்ந்தும் மாரவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை விபத்துக்குள்ளான ஹொலிகொப்டர் இன்று மாலை நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.