விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னத்துடனான சுவரொட்டி: பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
யாழ். வடமராட்சியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகளின் கொடியைப் பறக்க விடப்பட்டமை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உடுப்பிட்டியில் கடந்த 26ஆம் திகதி விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸில் முறையாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சின்னத்துடனான கொடி
இந்நிலையில், மறுநாள் 27ஆம் திகதி உடுப்பிட்டியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான கொடி பறக்க விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து , பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று அவற்றை அகற்றியதுடன், அவற்றை சான்றுப்பொருட்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இந்தத் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
