இராணுவ ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் செல்வது குறித்து விசாரணை
இராணுவ ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களின் கைகளுக்கு செல்வது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் செல்கின்றன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான ஆயுதம் கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இராணுவ அதிகாரி கைது
சுமார் மூன்று லட்சம் ரூபாவிற்கு இந்த ஆயுதம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தனர்.
அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் குழுவினருக்கு அதிநவீன ஆயுதங்கள் இவ்வாறு கிடைக்கப்பெறுவது பாரிய ஆபத்தான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)