நாமலின் விசாரணையில் திணறுகிறதா அநுர அரசாங்கம்..!
ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய இருவர் நேற்றைய தினம், சிஐடி மற்றும் எஃப் சிஐடியில் முன்னிலையாகியிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றபுலனாய்வுத் திணைக்களத்திலும், அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ச குற்றபுலனாய்வுத் திணைக்களத்திலும் முன்னிலையாகினர்.
இதன்போது, சுமார் 4 மணி நேரம், நாமல் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இருவரில் யாராவது ஒருவர் சரி கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் பலரின் மனதில் இருந்தது எனலாம்.
ஆனால், அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை, எனவே இந்த விசாரணை நடவடிக்கைகளில் அநுர அரசாங்கம் எந்நிலையில் உள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,