திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் பிரபல நடிகையிடம் விசாரணை
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை சம்பந்தமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் மோசடி தொடர்பாக பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொடவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரியான கணவருடன் சி.ஐ.டிக்கு சென்ற நடிகை
குற்றவியல் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் தனது கணவருடன் அவர், திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னிலையான நடிகை சேமினியிடம் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
குரல் பதிவுகள் தொடர்பிலும் விசாரணை
திலினி பிரியமாலியுடன் இருந்த நெருக்கமான தொடர்புகள், திலினி அவருக்கு வழங்கியிருந்த தொகை மற்றும் குரல் பதிவுகள் குறித்து சேமினி இத்தமல்கொடவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
திலினி பிரியமாலி, பிரபல நடிகைகள் மற்றும் மாடல்களை தன்னிடம் முதலீடு செய்தவர்களிடம் பழக செய்து, அவர்களுடன் இடம்பெற்ற விடயங்களை பதிவு செய்து செய்துள்ளதாகவும் அதனை பயன்படுத்தி முதலீடு செய்தவர்களை அவர் அச்சுறுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
You may like this video





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
