செம்மணி குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! தகவலறிந்தவரை பின்தொடரும் புலனாய்வுப்பிரிவு
செம்மணி மனித புதைகுழியில் நாளுக்கு நாள் துடிதுடித்து உயிர் நீத்த உறவுகளின் எலும்புக்கூடுகள் தோன்றி எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளில் எத்தனை குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் புதைந்துள்ளனர் என்பது யாரும் அறியாத விடயமே.
ஆனால் கிருஷாந்தி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு நடந்த கொடுமைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
அந்த சம்பவங்களும் அவர்களுக்கு நடந்த கொடுமைகளும் அதிர்ச்சியை மட்டுமன்றி பெரும் மனவேதனைகளை அளிக்கின்றது.
இந்நிலையில், இலங்கை இராணுவம் கிருஷாந்தியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய போது அவருடைய குடும்பத்தாரை தவிர்த்து அவ்வழியாக சென்றவர்களும் கிருஷாந்தியை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
அந்த மக்களை ஏமாற்றிய இராணுவத்திடமிருந்து கிருஷாந்தி போன்ற பலரை காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் பொதுமகன் ஒருவர் எமது ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,