தொழிற்சாலை ஒன்றில் 400 ஊழியர்களுக்கு கோவிட் தொற்று! - விசாரணைக்கு உத்தரவு
குருநாகல் - துல்ஹிரிய சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுமார் 400 ஊழியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சாலை சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் செயற்படுத்தியதா? அல்லது தொழிற்சாலையில் கணிசமான எண்ணிக்கையிலான தொற்றுக்கள் கண்டறியப்படுவதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் விசாரணையில் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டர்.
அந்த தொழிற்சாலையில் சுமார் 3,000 ஊழியர்கள் கடமைப்புரியும் நிலையில் அதில் பலர் தங்கள் சொந்த செலவில் தாமாகவே முன்வந்து பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மீதமுள்ளவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டபோது அவர்களில் சில உயர் அதிகாரிகள் உட்பட 400 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
