பழக்கடைகளில் திடீர் பரிசோதனை: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை(Photos)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் சுகாதார அலுவலகத்தினால் அனைத்து பழக்கடைகளிலும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸின் உத்தரவிற்கமைய நேற்றையதினம் (22.05.2023) இந்த பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக தெரியப்படுத்தவும்
இவ்வாறு செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்வதால் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே இதனை தடுக்கும் பொருட்டு இவ்வாறு இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் பழங்களையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0762250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு சுகாதார அமைப்பு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
