தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை
தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகருக்கு எதிராக, மருத்துவ அதிகாரிகளின் முறைப்பாடுகளுக்கு அமைய விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியான முறையில் நடவடிக்கைகள்
மருத்துவமனை வாகனங்கள், எரிபொருள் பயன்பாடுகள், மருத்துவமனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவ அத்தியட்சகரைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல் தலையீடு செலுத்தப்படுகின்றது என்று மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நீதியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மேலும் கூறியுள்ளனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri