அரச காணிகள் தொடர்பில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
அரச காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து காணி சீர்திருத்த ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு நிறுவனங்களால் அரச காணிகளை விடுவிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய காணி சீர்திருத்தம்
அதன் பிரகாரம் எதிர்வரும் பதினைந்து நாட்களில் அதற்கான புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரச காணிகளை அப்புறப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நில அளவைப் பணிகளை நிறைவு செய்த தமது ஆணைக்குழுவின் கீழ்வரும் 57,000 காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri