நடைமுறைக்கு வரவுள்ள புதிய வாகன தரிப்பிட திட்டம்
கொழும்பு மாநகர சபைக்குள் வாகனங்களை நிறுத்த புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிடத்தை நிர்வகிப்பதற்காக வீதிகளுக்கு ஒப்பந்ததாரர் மற்றும் நிருவாகியொருவரை நியமிக்கும் முறைக்கு பதிலாக, தற்போது குறிப்பிட்ட பிரதேசத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பிரதிப்பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறை 3 மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அந்த பகுதியில், வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன தரிப்பிடங்களுக்கு பல்வேறு தொழில்நுட்பமுறை
தற்போது ஒரு வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த காலம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் அந்த அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வாகனத் தரிப்பிடங்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
