வடமாகாண இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு (Video)
வடமாகாண இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு வவுனியாவில் இரு தினங்களாக இடம்பெற்றுவருகின்றன.
வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு மற்றும் ஆளணி பிரிவினரால் குறித்த நேர்முகத் தேர்வு முன்னெடுக்பப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூல பொலிஸாரின் ஆளணியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாணத்தின் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர், யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில், தமிழ் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து தமது கல்வித் தகமை மற்றும் உடற் தகுதி என்பவற்றை வெளிப்படுத்தி நேர்முகத் தேர்வில் பங்கு பற்றி வருகின்றனர்.
இவ் நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படுபவர்கள், தமது
உடல் தகுதியை நிரூபிக்கும் தேர்விலும் பங்கு பற்றி அதிலும் தெரிவு
செய்யப்படும் பட்சத்தில் பொலிஸ் சேவைக்கு உள்ளீர்க்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
