P2P இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோக நாதன் இன்று பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவில் 2 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்றையதினம் பல தரப்பட்ட கேள்விகள் அவர் சார்ந்த வரலாறுகள் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், கையடக்க தொலைபேசியில் இருக்கின்ற முகநூல் தொடர்பாகப் பதியப்பட்டுள்ளது.
அதிலும் தடை செய்யப்பட்ட செயலி தொடர்பாக முகநூல் மற்றும் வட்ஸ்சப் இணைய வழியூடாக இயங்கும் சில குழுமங்களைச் செயற்படுத்துவது தொடர்பாகச் சந்தேகம் உள்ளதாகவும் இதன் இயக்குநர் நீங்கள் தான் என்றும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சிவயோகநாதன் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்காக உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது அவருடைய தேசிய அடையாள அட்டை கடவுச்சீட்டு மற்றும் ஸ்மார்ட் ஃபோன், சிம்கார்ட் உட்பட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam