கைக்குண்டுடன் கைதான சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி (PHOTOS)
காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனுமதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று வழங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக்காலங்களில் பல வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்று முன் தினம் காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 7ம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
மட்டக்களப்பில் பொலிஸ் காவலரண் அருகில் கைக்குண்டுடன் ஒருவர் கைது





