யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய யுவதியை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய சந்தேக நபரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். முட்டுச்சேனை, மாவடிச்சேனை,வெருகல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதுடைய யுவதியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர் துஷ்பிரயோகத்திற்குப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
