இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்: வெளியாகிய காரணம்

Sri Lanka Police Dubai Sri Lanka Police Investigation
By Dharu Sep 02, 2023 02:09 PM GMT
Report

சர்வதேச பொலிஸார் தற்போது குற்றவாளிகளுக்கு சிவப்பு பிடியாணைகளை வழங்க மறுத்து வருவதாக குற்றவியல் மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கையில் வழங்கப்படும் தண்டனை மரண தண்டனை என்பதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் அழைக்கப்பட்ட போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

148 சிவப்பு பிடியாணை

இந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குற்றம் மற்றும் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட,

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்: வெளியாகிய காரணம் | Interpol Refusing Red Warrants

"பாதாள உலகத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து 148 சிவப்பு பிடியாணைகளை பெற்றுள்ளோம். அவர்களில் சிலரை இலங்கைக்கு அழைத்து வர வாய்ப்பு கிடைத்தது.12 பேர் இந்தியாவில் சிறையில் உள்ளனர்.

பாதாளக்குழுக்கள் முழுமையாக வெளிநாட்டில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணத்திற்காக கொலை செய்யும் குழுவையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்களுக்கு உதவுவோர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பான கோப்புகள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு

எனினும் சிலரின் செயற்பட்டால் அதிகாரிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அவ்வாறான கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்: வெளியாகிய காரணம் | Interpol Refusing Red Warrants

ஒருவரைக் கைது செய்யப் போகும் போது, அவர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு செல்வது இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது.

சமீபத்தில், ஹந்தயா என்ற நபர் குற்றம் நடந்த 02 நாட்களுக்குள் துபாய்க்கு சென்றுள்ளார்.

இவ்வாறான குற்றவாளிகள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை கேட்டால், அவர்கள் அதனை மறுக்கின்றனர்.

ஒரு சந்தேக நபரை உங்கள் நாட்டிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் கொண்டு வந்து ஒப்படைக்க மாட்டோம் என அழுத்தமாக தெரிவிக்கின்றனர்.

அதேபோல், நாங்கள் கோரிய 05 சிவப்பு அறிவிப்புகளை அவர்கள் நிராகரித்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US