செவ்வந்தி தொடர்பில் கசிந்த தகவல்..! களமிறங்கும் இன்டர்போல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரின்(Interpol) உதவியுடன் குறித்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பத்மேவின் வாக்குமூலம்
இஷாரா செவ்வந்தி மீது கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, அவர் நாட்டை விட்டு தப்பியோடி தற்போது டுபாயில் வசித்து வருவதாக கெஹல்பத்தர பத்மே வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
