ரஷ்யா மீது இணையதள போர் - அரசு ஊடக தொலைக்காட்சி செயற்பாடுகளை முடக்கிய மர்ம குழு
ரஷ்யா மீது இணையதள போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத இணையதள ஊடுருவி குழுவொன்று அறிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இரண்டு நாட்களாக உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதுடன், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் ரஷ்யா மீது இணைய போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத குழு அறிவித்துள்ளது.
ரஷ்ய அரசுக்கு எதிரான இந்த சைபர் தாக்குதலில் முதற்கட்டமாக அந்த நாட்டின் அரசு ஊடக தொலைக்காட்சியின் கணணிகளை ஊடுருவி செயல்பாடுகளை முடக்கியுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.