நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இணைய ஊடகவியலாளர் குற்றவாளி என தீர்ப்பு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய இணையக் கட்டுரையை பதிவேற்றியதாக கூறப்பட்ட இணைய ஊடகவியலாளர் டெஸ்மண்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர மற்றும் மாயாதுன்னே கொரியா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அவமதிப்புக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
எனினும், நீதிவான் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அவர் நீதிமன்றத்துக்கு தெரியாமல், நாட்டை விட்டு வெளியேறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையிலேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்தப்பட்டது.
டெஸ்மண்ட் சதுரங்க டி அல்விஸ் எழுதிய கட்டுரை 2020 ஏப்ரல் 30 அன்று பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |