அரசிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணைய தயாராகும் சுதந்திரக்கட்சி
அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணையவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பதிவாகிவருகின்றன.
ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள், சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமையை அடுத்து சுதந்திரக் கட்சியின் தலைமை அரசிலிருந்து விலகும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியாக இணைந்து தேர்தல்களில் போட்டியிடாதிருக்கவும் சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், அரசின் செயற்பாடுகளால் மக்களின் அதிருப்தி தீவிரமடைந்து வருவதால் அரசுக்கு எதிராக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளன.
அதேசமயம் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேற உள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை இணைத்து பாரிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கவும் திரைமறைவில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகச் செய்திகள் பதிவாகி வருகின்றன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
