நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்
சர்வதேச மகளிர் தினம் இன்றைய நாளில் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் பல பகுதிகளிலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா
வவுனியா நகரசபை மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.
சர்வதேச மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரத்தினகுலம் தலைமையில் இதற்கான நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழ் பிரதேசசபையின் செயலாளர் சுகந்தி கிசோர், வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் எம்.வி.குரூஸ், நூலகர் பாமினி உருசந்திரன், இந்து அன்பகத்தை சேர்ந்த சாமி அம்மா, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா செய்தி - தீசன்
மன்னார்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'நாடும் தேசமும் உலகமும் அவளே' எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகரசபை உறுப்பினர் சி.அந்தோனியம்மா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், மாவட்டத்தில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக பெண் பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குகொண்டு வந்துள்ளனர்.
மேலும் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.








கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam