சர்வதேச ரீதியாக அசத்தி சாதனை படைத்த வெள்ளவத்தை மாணவி
தாய்லாந்தில் நடைபெற்ற I Am Model Search Kids International - 2025 அழகுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சிறுமி முதல் பரிசை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இலங்கை சிறுமி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 8 வயதாக ஏஞ்சலா விமலசூரிய என்ற சிறுமியே விருது பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி
கடந்த 24ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஏஞ்சலா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் ஏஞ்சலா நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்க அவரது பயிற்சியாளர் உட்பட ஒரு குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் சென் லோரன்ஸ் பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.