எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கை சர்வதேச வர்த்தக விசாரணைக்கு மாற்றுவது தொடர்பில் வெளியான தகவல்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகார வழக்கு சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (01.06.2023) ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பு
மேலும் இந்த வழக்கை சர்வதேச வர்த்தக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து (01.05.2023) ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கை சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து ஆராயுமாறு சம்பந்தப்பட்ட வழக்கை கையாளும் சட்ட நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




