இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகள் வரலாம்! அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடும், மக்களும் பெற்றுக்கொண்ட வெற்றிகளை தற்போதைய அரசாங்கம் ஒவ்வொன்றாக பின்நோக்கி திருப்பி வருகிறது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல(Lakshman kiriella) தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாக்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக சர்வதேசம் எமது நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேசத்தை வெற்றிகொண்டு, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri