சர்வதேசம் அங்கீகரிக்கும் அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து உடனடியாக சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அப்படியில்லை என்றால், அனைத்து தரப்பினருடன் இணைந்து கடும் முடிவு எடுக்கப்படும் என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் நடந்தவற்றை பேசுவதை நிறுத்தி விட்டு, தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையான நிர்வாக பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும்.
நாடு கோரும் மாற்றத்தை வழங்க தவறினால், முழு அரச சேவையின் ஊழியர்களும் இணைந்து அழுத்தங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச ஊழியர்களை சுதந்திரமாக மாற்றும் முதல் நடவடிக்கையாக 21 அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஷரத்தை உள்ளடக்க வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால், அரச சேவை தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் எனவும் ரோஹன டி சில்வா கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
