சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்..!
இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தொடர்புடைய அறிக்கையின்படி, மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்
இதன்படி, வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை இதுவரை விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசைகளிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.