உலக சுற்றுலா வரைபடத்தில் நுவரெலியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்
உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள "ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்" பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய சுற்றுலாச் சேவை வழங்கும் தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த இணையத்தளத்தில், நுவரெலியாவை 'சின்ன இங்கிலாந்து' (Little England) எனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்
இதமான காலநிலையைக் கொண்ட நுவரெலியா, உயர்தர தேயிலை உற்பத்திக்கு சர்வதேச ரீதியில் பெரும் புகழ்பெற்றதாக இருப்பதால், அங்குள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காலனித்துவ காலக்கட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் பயணம் செய்வது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த அனுபவத்தைத் தரும் என Agoda சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், Agoda-வின் மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், ஏனைய நாடுகளுடன் நுவரெலியாவும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
- இந்தியாவின் சிம்லா மற்றும் மூணாறு மலைப்பகுதிகள்.
- மலேசியாவின் கெமரன் ஹைலண்ட்ஸ் (Cameron Highlands).
- வியட்நாமின் சபா (Sapa)
- மலைப்பகுதி மற்றும் பிரான்ஸ் காலனித்துவ தாக்கத்தைக் கொண்ட தலாட் (Dalat).
- இந்தோனேசியாவின் பண்டுங் (Bandung)
- பிரதேசம். பூட்டானின் திம்பு (Thimphu) நகரம்.
தற்போது 39 மொழிகளில் சேவையாற்றும் Agoda இணையத்தளம் ஊடாக, 6 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.