இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ள சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம்
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.
இலங்கைக்கு வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரம் இறங்கியிருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கொடுப்பனவு மீளச் செலுத்தப்படாமையால் நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.
அத்துடன் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 14 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
