தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்

Sri Lanka Journalists In Sri Lanka
By Parthiban Nov 14, 2023 12:08 AM GMT
Report

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று சி.பி.ஜே கோரியுள்ளது.

ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் நிலை என்ன! (Video)

ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் நிலை என்ன! (Video)

அரசின் நீண்டகால நடவடிக்கை

இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என சி.பி.ஜே அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லியீ தெரிவித்துள்ளார்.

மேலும், மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பிலும் அது மீறப்படும் போது தமது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் தமிழ் செய்தியாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தும் அரசின் நீண்டகால நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம் | International Pressure Harassment Tamil Journalist

இந்நிலையில் மட்டக்களப்பிலுள்ள சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸார் அவர்களைத் தனித் தனியாக விசாரித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரித்து வெளியிட்டமை தொடர்பாக அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக, செயற்பாட்டுக் குழுவான ஜே.டி.எஸ் (JDS) அமைப்பை மேற்கோள் காட்டி சி.பி.ஜே தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை நிர்வாகத்தில் மாற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை நிர்வாகத்தில் மாற்றம்

 ஊடகத்துறையின் பின்புலம்

இந்த இரு சுயாதீன ஊடகவியலாளர்களும் மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை அரச ஆதரவுடன் வலிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் தமது வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது எனக் கூறி கால்நடை விவசாயிகள் முன்னெடுத்த போரட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.

அவர்களின் போராட்டாம் இப்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அந்த போராட்டங்களின் போது செய்தி சேகரிக்கச் சென்ற அதே நாளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார். அந்த இரு நிகழ்வுகள் குறித்த செய்திகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளிப்பதற்காக அந்த இருவரும் அந்த இடங்களுக்குச் சென்றிருந்தனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம் | International Pressure Harassment Tamil Journalist

இந்நிலையில், அவர்களது வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி அவர்களின் தனிப்பட்ட மற்றும் ஊடகத்துறையின் பின்புலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளார் என்கிறது சி.பி.ஜே அமைப்பு.

விசாரணையின் முடிவில் அவர்கள் தெரிவித்த விடயங்களை வாக்குமூலமாக எழுதி அதில் கையெழுத்திடுமாறு அந்த பொலிஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் கால்நடை விவசாயிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அந்த போராட்டம் தொடர்பிலான குற்ற விசாரணையில் அவர்களுடன் பெயரிடப்பட்டுள்ளனர் என்று கூறி, இருவரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம் | International Pressure Harassment Tamil Journalist

எனினும், சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமாருக்கு எழுத்துமூலமான அழைப்பாணையோ அல்லது அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த பொலிஸ் அறிக்கையோ அளிக்கப்படவில்லை என்று சி.பி.ஜே கூறியுள்ளது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தாலும் பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களிடையே இன முரண்பாடுகள் தொடர்வதாக தனது அறிக்கையில் சி.பி.ஜே சுட்டிக்காட்டியுள்ளது. 

பிரான்சில் கார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பிரான்சில் கார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த ரிஷி சுனக்

பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த ரிஷி சுனக்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US