இலங்கையுடன் இதுவரை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுக்காத சீனா! வெளியான தகவல்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள போதும், சீனாவானது இதுவரை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லையெனவும் பேச்சுவார்த்தையை நடத்த திகதியைக்கூட இதுவரை சீன அரசாங்கம் வழங்கவில்லையெனவும் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையார் கலாநிதி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்தைகள் தாமதம் அடைவதனால் இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய கடனில் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உடனடியாக தீரக்கூடிய நிலையில் இல்லை.
இலங்கை பெற்ற கடன்கள்
முக்கியமான பிரச்சினை இலங்கை தாம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதை பிற்போட்டுள்ளது. அல்லது தவிர்த்துள்ளது.
அதனை அடிப்படையாக வைத்துதான் இலங்கை மேலதிக கடன்களை வெளிநாடுகளில் இருந்தோ வெளி நிதி நிறுவனங்களில் இருந்தோ பெற்றுகொள்ள முடியாத நிலை வந்த போது தான் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டிய நிலை வந்தது.
இந்த ஆளணி மட்ட பேச்சுவார்ததைகள் முன்னேறி இருந்த நிலையில் கடன் வழங்கிய நாடுகளிடம் இருந்து ஒரு உத்தரவாதத்தை பெற்றுத்தருமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியது.
ஏனென்றால் அதற்கு பிறகுதான் சர்வதேச நாணய நிதியன் குழுக்கூடி இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பில் முடிவு செய்யும். இந்த டிசெம்பர் மாதத்திலே அந்த குழுக்கூடி நிதியை வழங்ககூடிய வாய்ப்பு இருந்தது.
ஆனால் இலங்கை தான் கடன் பெற்ற மூன்று முக்கிய நாடுகள் இந்தியா, ஜப்பான், சீனா போச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும் கூட இந்தியா, ஜப்பான் ஊடான பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முன்னேறியிருந்தாலும், சீனாவுடனான பேச்சுவார்தைகள் நடைபெறவே இல்லை” என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் டிசெம்பர் வரை இலங்கைக்கு காலகெடு விதித்துள்ளது.
அதற்கு இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிடம் பெற்றுகொண்ட கடனை திருப்பி செலுத்தும் முறைமை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிபந்தனை விதி்த்திருந்தது.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லையெனவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
