சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்பின் பின்னர் கலாசார இனப்படுகொலையை அதிகரித்துள்ள இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பிற்கு பிறகு4 இலங்கை கலாசார இனப்படுகொலையை அதிகரித்துள்ள நிலையில், தமிழர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களையும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியையும் உலக தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம் கோரியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான கலாசார இனப்படுகொலையை இலங்கை திட்டமிட்டு விரிவுபடுத்துவது குறித்து தமிழ் புலம்பெயர்ந்தோர் தீவிரமான அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பன நிதியுதவிக்கு அப்பால், பூர்வீக மக்களின் நில உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நாட்டின் தொடர்ச்சியான அரசியல்
இதேவேளை தமிழர்கள் விரும்பத்தகாதவர்கள் என்று கருதுவதன் மூலம், இலங்கை அரசாங்கங்கள், 40 ஆண்டுகளாக தமிழ் முதலீடுகள், தொழில்முனைவு மற்றும் திறமைகளை வேறு இடங்களில் செலுத்தியுள்ளது.
இதன் பிரதிபலனே அந்த நாட்டின் தொடர்ச்சியான அரசியல் ஸ்திரமின்மைக்கு ஆணிவேராகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்குப் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் திணைக்களம் தமிழீழத்தின் எல்லைப் பகுதியில் உள்ள தமிழர் பாரம்பரிய இடங்களை குறிவைத்து அழித்து வருகிறது.
பௌத்த சிங்கள தீவிரவாதம்
அத்துடன் ஒரு தேசமாகவும், தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்குகிழக்கில் வாழ்ந்து வருகின்றனர்.மியன்மாரைப் போன்ற சித்தாந்தத்துடன், இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து பௌத்த சிங்கள தீவிரவாதம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பண்பாட்டு இனப்படுகொலை என்பது தமிழர்களை அழிக்கும் இலங்கையின் நோக்கத்தின் ஒரு பகுதியாகும், மேலும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தமிழ் நூலகத்தை 1981 இல் இலங்கை அரசாங்கம் எரித்தது.
மூன்று தசாப்தங்களுக்கு எதிரான போரின் போது தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் மீது வான்வழி குண்டுவீச்சுக்கு இலங்கை அரசாங்கம் நன்கு அறியப்பட்டதாகும்.
இராணுவ ஆக்கிரமிப்பு
தமிழர்கள் 1995 இல் நவாலி புனித பேதுரு தேவாலயத்தின் மீது வான்வழி குண்டுத் தாக்குதல் ஒரு உதாரணம்.மற்றுமொரு சமீபத்திய உதாரணம் கீரிமலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆதி சிவன் கோவில் முழுவதுமாக அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டது.
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியப்பிணை எடுப்புக்கு பின்னர், தமிழ் பாரம்பரிய தளங்களை அழிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
தமிழர்கள் மீதான போருக்கு நிதியளித்தமை மற்றும் தமிழ்ப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக நேரடியாக கடன் வாங்கியதில் இருந்தே இலங்கையில் கடன் பிரச்சினைகள் ஏற்பட்டன.
எனவே, அரச அதிகாரிகள், இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் செய்த குற்றங்களுக்கு சர்வதேச நீதிக்கு வழி வகுக்கும் வகையில், ரோம் சாசனத்தை, பொருளாதார உதவியுடன் ; இணைக்குமாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தன.
எனினும் சர்வதேச நாணய நிதியம், மனித உரிமைகளை பரிசீலனை செய்யாமல், இலங்கையின் பிணையெடுப்புககு உதவியளித்துள்ளது.
இதன் விளைவாகவே இலங்கை அரசு கலாசார இனப்படுகொலையின் ஒரு பகுதியாக தமிழர் பாரம்பரிய தளங்களை அழித்து வருகிறது என்று உலக தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது .
1953 மற்றும் 1981 க்கு இடையில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொகை 465வீதத்தினால் அதிகரித்தது, அதே நேரத்தில் தமிழ் மக்கள் தொகை 149வீதத்தினால் மட்டுமே அதிகரித்தது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 435வீதத்தினால் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் தமிழ் மக்கள் தொகை 145வீதத்தினால் மட்டுமே அதிகரித்தது. வடமாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 137வீதத்தினால் அதிகரித்துள்ளது.
தமிழ் மக்கள் தொகை அதிகரிப்பு
அதே நேரத்தில் தமிழ் மக்கள் தொகை 92வீதத்தினால் மட்டுமே அதிகரித்தது. மேலும், 1981ல் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் எந்த ஒரு மாவட்டத்திலும் மொத்த சனத்தொகையில் தமிழ் மக்கள் தொகை 10வீத அதிகரிப்பை தாண்டவில்லை.
இதற்கு மாறாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிங்கள மக்கள் தொகை முறையே 16.55, 33.62 மற்றும் 37.5வீதமாக உயர்ந்துள்ளது.
உண்மையில், சிங்களக் குடியேற்றம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களின் இன அமைப்பை மாற்றி, ஈழத் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய தாயகமாகக் கருதப்படும் பகுதியின் அளவைக் குறைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பிற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் கலாசார இனப்படுகொலையானது தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிரவாதிகளை திருப்திப்படுத்துவதாகவே பார்க்க முடியும்.
எனவே, சர்வதேச சமூகம், குறிப்பாக மேற்குலக ஜனநாயக நாடுகள், தமிழ் இனப்படுகொலையை கண்டித்து, தமிழர்கள் தங்கள் மண்ணில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் மாவீரர்களின் கல்லறைகளை அழித்தல்
தமிழர் பிரதேசங்களில் 1989 மற்றும் 2009 க்கு இடையில், 27 தமிழ் மாவீரர் மயானங்கள் இருந்தன, மேலும் 2008-2009 போரின் போது ஆறு கல்லறைகள் கட்டப்பட்டன.
மொத்தம் உள்ள 33 கல்லறைகளில் இருந்து இன்னும் பல படங்கள் மற்றும் விபரங்கள் டிஜிட்டல் இடத்தில் காணப்படுகின்றன.
இந்தநிலையில் தமிழ் மாவீரர்களின் கல்லறைகளை அழித்தமை இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே திட்டமிட்ட நடவடிக்கையாகும்.
அந்த மயானங்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் போராளிகளின் இளைப்பாறும் இடங்களாகவும், இறந்தவர்களின் நினைவாகவும் இருந்தன.
மயானங்களை அழிப்பதும் பண்பாட்டு இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும், இது தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், தமிழீழத்தில் உள்ள தமிழர் அடையாளங்களை வேண்டுமென்றே இல்லாது செய்கிறது.
எனவே அனைத்து தமிழ் மாவீரர் மயானங்களும் முன்னர் இருந்த இடத்திலேயே பழைய வடிவில் புனரமைக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலக தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம் கோரியுள்ளது.
கலாசார இனப்படுகொலை
இதற்கமைய கலாசார இனப்படுகொலையின் அண்மைய நிகழ்வுகளில் சில பாரம்பரிய தமிழர்
பாரம்பரியமான கிண்ணியா வெந்நீரூற்று திருகோணமலையில் பெயர் மாற்றம், வரலாற்று
தமிழர் வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலை அழிப்பு மற்றும் மட்டக்களப்பிலும், பல
இடங்களிலும் நில அபகரிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.