சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (03.05.2024) மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களது கோரிக்கை
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கோசங்களை எழுப்பியுள்ளனர்.
அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும் அரசஅதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
