தென்கிழக்கு பல்கலையின் சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு
தென்கிழக்கு பல்கலைக்கழக 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இடம்பெற்றது.
குறித்த நிக்ழ்வானது ஆய்வரங்க மாநாட்டின் இணைப்பாளர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நேற்று (2024.02.26) நடைபெற்றது.
ஆராய்ச்சி கட்டுரைகள்
உள்ளூர் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர்கள், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வானது எதிர்வரும் 29ஆம் திகதி (2024.02.29) இடம்பெறவுள்ளதோடு “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளிலான 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் (Gloucestershire) பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
குறித்த மாநாட்டில் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






