சர்வதேச விசாரணை அவசியம்: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்படவுள்ளன என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் ஏமாற்று நாடகமே அரங்கேற்றப்படும். சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.
முக்கிய ஆவணம்
அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மிகவும் முக்கிய ஆவணம்.

சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இங்கு நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். குற்றவாளிகள் உள்ள இடத்தில் நீதியை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே, சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்'' என்றார்.
பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான ரூபா பணம்: அநுரவின் தகவல்
சனல் 4வை விடுதலைப் புலிகளுடையது அல்லது வெள்ளைப் புலிகளுடையது என முத்திரை குத்துவார்கள்: யாழில் மக்கள் காட்டம்
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri