பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குறித்த பீய்ஜிங்கின் சொல்லாட்சி நீண்ட காலமாக அதன் செயல்களை மீறிவிட்டதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த உரிமைகளை ஊக்குவிப்பதாகக் கூறும் சீன அரசாங்கம், அது இலங்கை உட்பட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில் கொண்டிருக்கும் நீடித்த கடனை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிய 2.9 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சீனாவின் விதிமுறைகள் மதிப்பிடப்படுகின்றன.
இலங்கையின் மோசமான நெருக்கடி
சீனாவின் கடன் மறுசீரமைப்பை அடுத்தே, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கு புதிய நிதியுதவிகளை வழங்க முடியும்.
இந்த நிதிகள் விரைவில் வரவில்லை என்றால், அது இலங்கையின் மோசமான நெருக்கடிக்கு
வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள் என்றும்
கண்காணிப்பகத்தின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
