இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” (Photos)
யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது.
யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று (28) கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam