எரிபொருள் விலையில் தொடர் சரிவை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் தோல்வி
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதன்படி, WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம்(09.11.2026) மேலும் சரிவைச் சந்தித்துள்ளன.
WTI கச்சா எண்ணெய்யின் விலை 90.28 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை 97.09 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
சரிவடையும் விலை
இது இதற்கு முந்தைய நாளில் பதிவான விலையை விட 0.59 சதவீத சரிவாகும்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, இந்த விலைச் சரிவு பதிவாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்கு ஏற்பட்ட இந்த பின்னடைவு, ஈரானுக்கு எதிரான போரில் தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச அளவில் எண்ணெய் விலைகளின் சரிவிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, ஈரான் போர் நிலைமைகளில் சாதகமான தீர்மானங்கள் ஏற்படுமெனின் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய்யின் விலையில் மீண்டும் பாரியதொரு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.