தாமதப்படுத்தும் லசந்த விவகாரத்துக்கான நீதி! சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்
லசந்த விக்ரமதுங்கவின் கொலையில் நீதியை மேலும் தாமதப்படுத்தும் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளித்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IFJ) மற்றும் அதனுடன் இணைந்த இலங்கை சங்கங்களான ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FMETU), சுதந்திர ஊடக இயக்கம் (FMM) மற்றும் இலங்கை தொழில்முறை பத்திரிகையாளர்கள் சங்கம் (SLWJA) ஆகியவை இணைந்து குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் நிலவும் பரவலான தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வலுவான மற்றும் அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து ஊடக சங்கங்களும் அரசாங்கத்தை கோரியுள்ளன.
கொலை தொடர்பான விசாரணை
மேலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் விடுவிக்கப்படலாம் என்ற சட்டமா அதிபரின் அறிவிப்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து நீதி மறுப்பதாகும் இந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
தற்போது, பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும் பல்வேறு ஊடக அமைப்புகளும் குழுக்களும் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் குறித்தும், இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் தொடர்ந்து நிலவும் கலாச்சாரம் குறித்தும் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)