சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம்
திருகோணாமலை (Trincomalee) மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது சம்பந்தமான சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இன்று கிண்ணியாவுக்கு விஜயம் செய்துள்ளது.
குறித்த குழு விஜயத்தின் போது ஊடகவியலாளர்களுடன் தேர்தல் சம்பந்தமான விடயங்களை கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகள்
சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வளையமைப்பு (Asin network for elections) ANFREL மலேசியா நாட்டைச் சேர்ந்த மொஹம்மட் அஷ்ரப் ஸரபி தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஏ எல் அஷ்ரப் ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், திருகோணாமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, தேர்தல் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள உள்ளார்கள், வேட்பாளர்கள் எவ்வாறான பிரசாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டார்கள் முதலான விடயங்கள் தொடர்பில் அக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
