ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்! சர்வதேச மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT) ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும் தொனிப்பொருளிலான 2வது சர்வதேச மாநாடு (ICDE – 2026), முன்னாள் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறைத் தலைவரும், தற்போதைய பென்ஸ்டேட் (ஐக்கிய அமெரிக்கா) பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஈவான் பஃப் பேராசிரியருமான சுரேஷ் கனகராஜாவின் அனுசரணையில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மற்றும் நூலக அரங்குகளில் நடைபெறவுள்ளது.
ஆங்கில மொழிக் கற்பித்தல், சமூக மொழியியல் மற்றும் காலனித்துவமய நீக்கச் சிந்தனைகள் தொடர்பான முக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பியின் தலைமையில், பேராசிரியர் நா.பிரதீபராஜா மற்றும் பேராசிரியர் தி.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் பிமாலி இந்திரரத்ன, பேராசிரியர் ரோண்டா ஒலிவர், டாக்டர் வைதேகி ராஜபிள்ளை, பேராசிரியர் செண்டர் தோவ்சின் மற்றும் இணைப் பேராசிரியர் மேக்ஸ் ஸ்பாட்டி உள்ளிட்ட பல சர்வதேச புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.

ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா உள்ளிட்ட மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri