கோட்டாபயவை கலங்கடித்த சர்வதேசத்தின் முடிவு! வரப்போகும் திக் திக் நிமிடங்கள் (VIDEO)
ராஜபக்சர்களில் ஒருவரேனும் அரசாங்கத்தில் இருக்கும் வரை வெளிநாடுகள் நிதி மூலமான உதவிகளை இலங்கைக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது வங்குரோத்து நிலையை அடைய முக்கிய காரணம் என்னவெனில், இலங்கை அரசியல் யாப்பில் காணப்படும் மூன்று அம்சங்களான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவற்றில் முக்கியமான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் என்பன தோல்வியடைந்துள்ளமையே இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு காரணம்.
அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கபட்ட சட்டவாக்கத்தை வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையினால் அரசாங்கம் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.
மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் நம்பிக்கை இழந்துள்ளமையே கோட்டாபய அரசாங்கம் வங்குரோத்து அடையக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,